TamilOh - : சினிமா

இஸ்லாத்தில் மன அமைதி பெறுவதாக நடிகர் ஜெய் தெரிவித்தார்.
நடிகர் ஜெய் அன்மையில் அளித்த பேட்டியின் சாரம்சம்.

நடிகர் ஜெய், தனக்குக் கோவிலில் ஏற்பட்ட ஒரு சங்கடமான நிகழ்வின் காரணமாக இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

ஒரு நேர்காணலில்  மசூதியில் கண்ட சமத்துவத்தையும் மன அமைதியையும் பற்றிப் பேசிய அவர்  2019-ம் ஆண்டு முதலே இஸ்லாமிய நெறிமுறைகளை பின்பற்றி வருவதாகக் கூறியுள்ளார்.

தான் அணிந்த மாலைகள் மற்றும் சபரிமலைக்கு சென்றது குறித்தும், இயேசுவுக்காக ஜெபமாலை அணிந்து ஒரு வருடம் விரதம் இருந்தது குறித்தும் அவர் நினைவு கூர்ந்தார். இருப்பினும் கோவிலில் தனக்கு தொடர்ந்து அவமானங்கள் ஏற்பட்டதாகவும்! அது மிகுந்த மன வேதனையை அளித்ததாகவும் ஜெய் குறிப்பிட்டார்.

ஒரு நாள் மசூதிக்குச் சென்றபோது அங்கு நடந்த சம்பவங்களையும் பகிர்ந்துள்ளார். மசூதிக்குள் நுழைந்ததும்  அனைவரும் வரிசையாக தொழுகை செய்து கொண்டிருந்தனர். தான் ஒரு நடிகர் என்பது அங்கிருந்தவர்களுக்கு தெரிந்தும்!  தொழுகையின்போது யாரும் தன்னுடன் பேசவில்லை. வெளியே வரும்போது சிலர் அன்பாக பேசினார்களே தவிர, புகைப்படம் எடுக்க வற்புறுத்தவில்லை. அப்போதுதான் மசூதியில் அனைவரும் சமம் என்பதை உணர்ந்ததாக ஜெய் கூறினார். மசூதிக்குள் சென்றால் அல்லாஹ் மட்டுமே பெரியவன் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் அனைவரையும் சமமாக நடத்துவார்கள். தொழுகையின்போது எந்தவித தள்ளுமுள்ளும் இருக்காது, யாரையும் வெளியே போகச் சொல்ல மாட்டார்கள், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அமர்ந்து இறைவனைத் தொழலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இஸ்லாத்திற்கு மாறிய பிறகு தனது குணத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் 2019-ல் மதம் மாறியதாகவும், இஸ்லாத்தின் மீது தனக்கு அதீத நம்பிக்கை இருப்பதாகவும் ஜெய் கூறினார்.

எந்த கடவுளையும் வணங்காதவன் இப்போது பக்தனாக இருக்கிறானே என்று வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மதம் மாறிய பிறகு தனது பெயரை மாற்றவில்லை என்றும், அஸீஸ் ஜெய் என பெயர் மாற்றும் எண்ணத்தில் இருப்பதாகவும் அந்தப் பேட்டியில் ஜெய் கூறியிருக்கிறார்.