அமேரிக்காவிற்கு பெரும் தோல்வி

அமேரிக்காவிற்கு பெரும் தோல்வி

FB TamilMuslim

டீலுக்கு மறுத்த ஈரான். மெல்லவும், விழுங்கவும் முடியாத நிலையில் அமெரிக்கா. வளைகுடா போர் நிலவரம். 

பெரும் எடுப்பில் அதிஉச்ச படைப்பலத்தை வளைகுடா பகுதியில் குவித்து, தனது வலிமையை கான்பிப்பதன் மூலம் ஈரானை அடி பணியவைத்தல். மறுத்தால் தாக்குதல் நடத்துவதென்பது அமெரிக்காவின் திட்டம். 

ஈரானை இலகுவில் பணியவைக்க முடியாதென்று தெரிந்ததன் காரணமாகவே முதல் கட்டமாக வெணிசுவேலா நாட்டுக்குள் புகுந்து  ஜனாதிபதியை கடத்தி சாகசம் கான்பித்தனர். 

ஆனால் அமெரிக்காவின் எந்தவித அச்சுருத்தலுக்கும் பணியாமல் போரை எதிர்கொள்ள முழு அளவில் தயாரானதுடன் அதற்கான முழு ஏற்பாடுகளையும் ஈரான் மேற்கொண்டது.

அது மட்டுமல்லாது அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானிய தலைவர்கள், படை அதிகாரிகள் கொலை செய்யப்பட்டால், அடுத்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகளை முன்கூட்டியே திட்டமிட்டதனை அமெரிக்கா சற்றும் எதிர்பார்க்கவில்லை. 

 அமெரிக்காவின் துல்லியமான புலனாய்வு தகவல்கள் மற்றும் ஈரானின் யுத்த ஏற்பாடுகள் பற்றிய கள நிலவரத்தின் உண்மையை அறிந்துகொண்டதன் காரணமாக ஈரான் மீது தாக்குதல் நாடாத்த அமெரிக்கா தயங்குகிறது. 

ஏனைய நாடுகள் போன்று ஈரான் இராணுவரீதியில் பலயீனமான நாடாக அல்லது வெற்றிகொள்ளக்கூடிய நாடாக இருந்திருந்தால், எப்போதோ தாக்குதலை ஆரம்பித்திருப்பர். 

தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா தயங்குகிறதென்றால், அங்கே அவர்களுக்கு தோல்விப் பயம் உள்ளதென்று அர்த்தம். 

கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் வளைகுடாவை நோக்கிய பார்வை இருப்பதனால், தாக்குதல் நடத்தாமல் திரும்பிச் செல்வது பலத்த அவமானம் மட்டுமல்ல, மற்றைய நாடுகள் தனக்கு பயப்படமாட்டார்கள் என்ற நிலை. அதனால் எப்படியும் ஈரானை தாக்க வேண்டிய நிர்பந்ததில் அமெரிக்கா உள்ளது.

அவ்வாறு தாக்கினால் வெற்றியடயவும் முடியாது, ஆட்சி மாற்றமும் ஏற்படாது. அத்துடன் இரானின் பலமான பதிலடியினால் இழப்புக்களை சந்திக்க நேரிடும் என்ற அச்சமும் அமெரிக்காவுக்கு உள்ளது. அவ்வாறு இழப்புக்கள் ஏற்பட்டால் உலகின் முதன்மை வல்லரசு என்ற பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுவிடும் என்ற பயம்.

அதனாலேயே இரானோடு மறைமுக டீலுக்கு அமெரிக்கா சென்றது. ஆனால் எந்தவொரு டீலையும் ஈரான் நிராகரித்துள்ளதுடன் அது போருக்கு தயாராகவே உள்ளது. 

முகம்மத் இக்பால் 
சாய்ந்தமருது