FIFA உலக கோப்பை போட்டிகள்!

FIFA உலக கோப்பை போட்டிகள்!

21st of  June 2026.

2026 FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 
  ஸ்பெயின் அணி 4-0 என்ற கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தியது.
பெல்ஜியம் +ஈரான்  போட்டி 0-0 என்ற கணக்கில் சமனில் Drawமுடிந்தது.
 நெதர்லாந்து vs ஸ்வீடன் மோதலில் நெதர்லாந்து அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனை அபாரமாக வீழ்த்தியது.
 ஜெர்மனி vs ஐவரி கோஸ்ட் மோதலில் ஜெர்மனி அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
 ஜப்பான் vs துனிசியா மோதலில்  ஜப்பான் அணி 4-0 என்ற கோல் கணக்கில் துனிசியாவை தோற்கடித்தது.
 ஈக்வடார் vs குராசோ இந்தப் போட்டி 0-0 என சமனில் முடிந்தது. இதில், குராசோ அணியின் கோல்கீப்பர் எலோய் ரூம் Eloy Room 15 சேவ்களை Saves செய்து உலகக் கோப்பை வரலாற்றில் புதிய சாதனை படைத்தார்.

கனடாவில் உலகக் கோப்பை
கனடா இந்த உலகக் கோப்பையின் இணை-வழங்குநராக உள்ளது. வான்கூவர் மற்றும் டொரன்டோ நகரங்களில் மொத்தம் 13 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் கனடா ஆண்கள் தேசிய கால்பந்து அணி பங்கேற்கும் போட்டிகளும் அடங்கும்.
இந்தத் தொடர் ஜூன் 11 அன்று தொடங்கி ஜூலை 19, 2026 வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 48 நாடுகள் பங்கேற்கின்றன.