பேச்சுவார்தை பின்னடைவு!
ஜூன் 21, 2026
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வர, சுவிட்சர்லாந்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் பிரதிநிதிகள் இடையே உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் தொடங்கின.
ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் லெபனானில் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாகக் குற்றம் சாட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் உடனடியாக தனது பிரதிநிதிகளின் செயல்பாட்டை நிறுத்தவில்லை என்றால், மிகக் கடுமையான தாக்குதல்களைச் சந்திக்க நேரிடும் என்று சமூக வலைதளத்தில் எச்சரித்தார்.
பேச்சுவார்த்தையில் தொய்வு
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஈரானியப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்திலிருந்து வெளியேறினர். எனினும், தூதரக ரீதியான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லெபனானின் தெற்குப் பகுதியில் பாதுகாப்புக்காக தங்களுக்குத் தேவையான காலம் வரை படைகள் நிலைநிறுத்தப்படும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியாகத் தெரிவித்துள்ளார்.


