வன்கூவர் இலங்கை முஸ்லிம்களின் பெருநாள் ஒன்றுகூடல்.
27 மே 2026
Eid al-Adha ஹஜ்ஜுப் பெருநாள். கனடாவில் இன்று பல இடங்களில் முஸ்லிம் சமூகத்தால் கொண்டாடப்பட்டது.
இந்நாளில் பொதுவாக நடைபெறும் விஷயங்கள்:
காலை சிறப்பு ஈத் தொழுகை Eid Prayer
குடும்ப சந்திப்புகள் மற்றும் விருந்துகள்
Eid Mubarak வாழ்த்துகள் பரிமாற்றம்
குர்பானி Qurbani மற்றும் தான தர்மங்கள் கொடுப்பது. போன்றவைகளாகும்.
Canada முழுவதும் டொரோண்டோ, ஒட்டாவா, வான்கூவர்,மொன்றியல் உட்பட பல நகரங்களில் பெரிய அளவில் ஈத் தொழுகைகள் மற்றும் விழாக்கள் நடக்கின்றன.
இதன் அடிப்படையில் கனடா, பிரிடிஷ் கொலம்பியா, வன்கூவரில் இயங்கும் இலங்கை முஸ்லிம்களின் அமைப்பான SLMS-BC யின் பெருநாள் தொழுகையும் காலை உணவுடனான ஒன்றுகூடல் நிகழ்வும் நேற்று 27ம் திகதி காலை ரிச்மன் வரவேற்பு மண்டபத்தில் மிக விமர்சையாக நடந்தது. இதில் 700 க்கும் அதிகமான இலங்கை முஸ்லிம்கள் கலந்து சிறப்பித்தனர்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தமிழோவின் இனிய ஈத் முபாரக்! 🌙✨


