முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டுகள் சிறை!
September 01 2026,
முன்னாள் அமைச்சர் அபயங்கர ஜயரத்னவுக்கு 7 ஆண்டுகள் சிறை!
முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக பதவி வகித்த காலத்தில், ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்துக்குச் சொந்தமான 330,000 ரூபாய் பணத்தை மரவில பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு செலுத்துவதற்கு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்ததாக வழக்கில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், அவை ஒரே நேரத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டதால் மொத்த சிறைத்தண்டனை 7 ஆண்டுகளாகும்.
மேலும், அவருக்கு 200,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
Tamiloh.com


