வத்தேகமயில் கைவிடப்பட்ட 10 வயது சிறுமி ஆயிஷா!

வத்தேகமயில் கைவிடப்பட்ட 10 வயது சிறுமி ஆயிஷா!


இலங்கையின் வத்தேகம பகுதியில் சிறுமி ஒருவர் முச்சக்கர வண்டியில் அழைத்து வரப்பட்டு அநாதரவாக வீதியில் விட்டுச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

 10 வயதிற்குட்பட்ட சிறுமி ஒருவர் முச்சக்கர வண்டியில் வந்தவர்களால் வீதியில் அநாதரவாக இறக்கிவிட்டுச் செல்லப்பட்டுள்ளார்.
 மீட்கப்பட்ட அச்சிறுமியின் உடலில் தாக்கப்பட்டுள்ளமைக்கான காயங்கள் காணப்பட்டுள்ள நிலையில், அவர் உடனடியாக வத்தேகம பொலிஸாரால் மீட்கப்பட்டு சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ச்சியான துன்புறுத்தல்களுக்கு சிறுமி உள்ளாகியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
 பொலிஸாரிடம் பேசிய அச்சிறமி, தனது பெயர் ஆயிஷா என்றும், தனது தந்தையின் பெயர் ராசிக் என்றும் ஆரம்பகட்டத் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
 சிறுமியின் பெற்றோர் அல்லது உறவினர்கள் குறித்த விபரங்களைக் கண்டறியும் நோக்கில், வத்தேகம பொலிஸார் சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

வத்தேகம பொலிஸார் சிறுமியின் பெற்றோர் அல்லது உறவினர்களைக் கண்டறிய பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். மீட்கப்பட்ட சிறுமியின் உடலில் தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்ததால், அவர் தொடர்ந்து துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

10 வயதிற்குட்பட்ட சிறுமியை முச்சக்கர வண்டியில் கொண்டு வந்து வீதியில் இறக்கிவிட்டு சென்ற சம்பவம் குறித்து விசாரணைகள் நடைபெறுகின்றன.
காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தொடர்புடைய விபரங்கள் ஏதும் தெரிந்தால், உடனடியாக வத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Detail news