கல்முனை வைத்தியசாலை சீருடை பிரச்சினைக்கு தீர்வு!

கல்முனை வைத்தியசாலை சீருடை பிரச்சினைக்கு தீர்வு!

17 ஆகஸ்ட் 2026,

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்களின் சீருடைப் பிரச்சினைக்கு தீர்வு

கல்முனை ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட சுகாதார உதவியாளர்களின் சீருடை தொடர்பாக ஏற்பட்டிருந்த பிரச்சினை இன்றுடன் 18 முடிவுக்கு வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சென்ற 6ஆம் திகதி கல்முனை ஆதார வைத்தியசாலையில் புதிதாக 37 மூவின சுகாதார உதவியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 09 பேர் இஸ்லாமிய பெண்களாவர்.

இந்நிலையில், அவர்களது சீருடை தொடர்பாக எழுந்திருந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் சுகாதார அமைச்சு தீர்க்கமான முடிவொன்றை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறித்த சீருடைப் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

tamiloh.com