கல்முனை சீருடை விவகாரம்!அரசின் இனவாத முகம்!
20 ஆகஸ்ட் 2026,
சுற்றறிக்கையின்படியே
ஊழியர்கள் செயல்பட வேண்டும்!
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
அம்பாறை, கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனை
சீருடை பிரச்சினை தொடர்பான அரசாங்க நிலைப்பாடு
கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள ஆடைப் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை நாடாளுமன்றில் தெளிவுபடுத்தியுள்ளது.
நேற்று ஆகஸ்ட் 19 நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் பங்கேற்ற சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கினார்.
மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில், இந்தச் சம்பவத்தை அனைவரும் நிதானத்துடனும் முதிர்ச்சியுடனும் பார்க்க வேண்டும்.
சமூக ஊடகங்களிலோ வெளியிலோ வாக்கு வங்கியைக் குறிவைத்து வெளியிடப்படும் அறிக்கைகளையோ நடத்தைகளையோ அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது.
இலங்கை பல இன, பல மத, பல மொழி மக்கள் வாழும் நாடு. பல கலாசாரங்களுக்கு ஏற்ப உடைகள், உணவுகள், வழிபாட்டு முறைகள் உள்ளன. அவற்றின் ஒற்றுமையே இலங்கை அரசு.
தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்து சுமார் 11 மாதங்களில் இனவாதத்திற்கோ மத மோதல்களுக்கோ இடமளிக்கவில்லை.
கல்முனை விடயம் தேவையில்லாத மோதலாக வளரக் கூடாது! சிறிய இனவாத குழுக்களுக்கு வாய்ப்பாக மாறக்கூடாது.
அரச சேவையில் சீருடை அணிந்து பணியாற்றும் ஊழியர்களும், ஆடை நடைமுறை பின்பற்றும் ஊழியர்களும் உள்ளனர்.
சுகாதாரத் துறையில் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் ஊழியர்களை எளிதாக அடையாளம் காணவும், சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யவும் சீருடைகள் பயன்படுத்தப்படுகின்றன.
சீருடைகள் நீண்டகாலக் கலந்துரையாடல்கள் மற்றும் சீருடைக் குழுவின் ஆலோசனைகளுக்குப் பிறகே தீர்மானிக்கப்படுகின்றன.
சீருடைக் கொடுப்பனவுகள்
(2025 ஜனவரி 1 முதல்)
|
பதவி |
கொடுப்பனவு |
|
செவிலியர்கள் |
ரூ. 30,000 |
|
குடும்ப சுகாதார அதிகாரிகள் |
ரூ. 28,000 |
|
சுகாதாரப் பரிசோதகர்கள் |
ரூ. 30,000 |
|
இளநிலை ஊழியர்கள் |
ரூ. 18,600 |
நோயாளிகளுக்கான சேவைகள் தொடர்ந்து கிடைக்கவும், இனவாத உணர்ச்சிகளைத் தடுக்கவும் தற்காலிக இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சீருடையில் மாற்றம் தேவைப்பட்டால், அமைச்சின் சீருடைக் குழுவிற்கு யோசனைகளைச் சமர்ப்பித்து, கலந்துரையாடி, சுற்றறிக்கையை மாற்றும் பணிகளை ஆரம்பிக்கலாம்.
ஆனால் தற்போதைக்கு நடைமுறையில் உள்ள சுற்றரிக்கையின்படியே ஊழியர்கள் செயல்பட வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
சமீபகாலமாக முஸ்லிம் யுவதிகள் சுகாதாரத் துறையில் இணைவதில் ஆர்வம் காட்டி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. பாரம்பரிய ஆடைகள் தொடர்பான பிரச்சினைகளால் ஒருவர் அரச சேவையில் இணைவது கட்டுப்படுத்தப்படுவதை அரசாங்கம் ஆதரிக்கவில்லை.
எதிர்காலத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் யாராக இருந்தாலும் சுகாதாரத் துறையில் இணைவதற்கும், அவர்களின் மத-கலாச்சார உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தேவையான சீர்திருத்தங்கள் குறித்துக் கலந்துரையாட அரசாங்கம் தயாராக உள்ளது.
Tamiloh.com


