சவுதி அரம்கோ மீது தாக்குதல்!

சவுதி அரம்கோ மீது தாக்குதல்!

09 August 2026,

சவுதி அரேபியாவின் ஜாசான் நகரில் உள்ள அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு ஏமனின் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் உரிமை கோரியுள்ளனர்.

 ஹௌதி ராணுவப் பேச்சாளர் யஹ்யா சாரி, இந்தத் தாக்குதல் சவுதி தரப்பு ஏமனின் சஆதா மற்றும் ஹஜ்ஜா மாகாணங்கள் மீது நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடியாக நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
 தாக்குதலால் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. எனினும், அரம்கோவின் தொழிற்துறை பாதுகாப்பு மற்றும் தீயணைப்புப் படையினர் தீயை விரைந்து அணைத்தனர். உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என சவுதி எரிசக்தி அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆலையின் தினசரி எண்ணெய் சுத்திகரிப்பு திறன் 400,000 பேரல் ஆகும்.
 இதற்கிடையில், சவுதியின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜூபைல் நகரிலுள்ள எரிவாயு ஆலையிலும் வெடிச்சத்தமும் தீ விபத்தும் ஏற்பட்டதாக ஊடகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.