60000 மொரோக்கர்கள் ஒரே நேரத்தில் ஸ்பைனில் தஞ்சம்!

60000 மொரோக்கர்கள் ஒரே நேரத்தில் ஸ்பைனில் தஞ்சம்!

ஸ்பெயினுக்குச் சொந்தமான வட ஆப்பிரிக்க நகரமான Ceuta மொரோக்கோவுடன் நில எல்லையைப் பகிர்கிறது. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆப்பிரிக்காவிலுள்ள நில எல்லையாகும். கடந்த சில நாட்களில், சுமார் 60,000 பேர், பெரும்பாலும் மொரோக்கோவைச் சேர்ந்த இளைஞர்கள், கடல் வழியாக நீந்தியும், நில எல்லை வழியாகவும் Ceuta-வுக்குள் நுழைய முயன்றனர். 

இதற்கு பல காரணிகள் ஒன்றாகச் சேர்ந்தன

மொரோக்கோவில் வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஐரோப்பாவுக்குச் செல்லும் விருப்பம் அதிகரித்தது.

சமூக ஊடகங்களில் Ceuta எல்லை திறந்துவிடப்பட்டுள்ளது உள்ளே சென்றால் உடனே திருப்பி அனுப்ப மாட்டார்கள் போன்ற தகவல்கள் பரவின. இந்த தகவல்களில் சில தவறானவை அல்லது மிகைப்படுத்தப்பட்டவை என அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஸ்பெயின் உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு குறித்து பலர் தவறாகப் புரிந்துகொண்டனர். அந்தத் தீர்ப்பு குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே உடனடி திருப்பி அனுப்பும் நடைமுறைக்கு வரம்பு விதித்தது.  எல்லோருக்கும் தஞ்சம் கிடைக்கும் என்று அது கூறவில்லை. 

Ceuta-வில் திடீரென வந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு தங்குமிடம், உணவு, மருத்துவ வசதி போன்றவற்றில் பெரும் அழுத்தம் ஏற்பட்டது.

ஸ்பெயின் பாதுகாப்புப் படைகள் எல்லைக் கட்டுப்பாட்டை வலுப்படுத்தின.

பெரும்பாலானவர்கள் பின்னர் மொரோக்கோவுக்குத் திரும்பினர் அல்லது சட்ட நடைமுறைகளின் கீழ் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்த முயற்சியின் போது கடலில் மூழ்குதல் மற்றும் நெரிசல் போன்ற காரணங்களால் பலர் உயிரிழந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.