முகநூலில் நபியை நிந்தனை செய்த அனோஜனுக்கு சிறை!
இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் என்பவருக்கு சவூதி அரேபியாவில் 5 ஆண்டு சிறையும், 30 லட்சம் சவூதி ரியால் சுமார் 8 கோடி இந்திய ரூபாய் 27 கோடி இலங்கை ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக்கில் இஸ்லாமிய புனித நபி பற்றி அவதூறு கருத்து பதிவிட்டதற்காக, இது நாட்டின் இணைய குற்றச் சட்டம் மற்றும் இஸ்லாமிய சட்டங்களை மீறியதாகவும் கூறப்படுகிறது.
இவர் கல்முனையை சேர்ந்த இலங்கைத் தமிழர் சவூதியில் பணிபுரிந்து வந்தார்.
கருத்து பதிவிட்ட 5-10 நிமிடங்களில் அதை நீக்கிவிட்டு, வீடியோ மூலம் பகிரங்க மன்னிப்பும் கேட்டுள்ளார்.
·இருப்பினும், ஸ்கிரீன்ஷாட் வைரலானதைத் தொடர்ந்து புகார் எழுந்தது.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், இவரை விடுவிக்க தூதரக ரீதியில் தலையிடுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


