IMF குழு செப்டம்பர் 10 முதல் இலங்கைக்கு விஜயம்!

IMF குழு செப்டம்பர் 10 முதல் இலங்கைக்கு விஜயம்!

செப்டம்பர் 05 2026,

இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் EFF திட்டத்தின் 7ஆவது மீளாய்வு

இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்களின் முன்னேற்றம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீட்டிக்கப்பட்ட நிதியுதவித் திட்டத்தின் (EFF) ஏழாவது மீளாய்வை மேற்கொள்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் குழு எதிர்வரும் செப்டம்பர் 10ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

இந்த விஜயத்தின் போது, இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் பொருளாதார சீர்திருத்தங்களின் முன்னேற்றம், நிதி நிர்வாகம், வருவாய் அதிகரிப்பு, கடன் நிலைத்தன்மை உள்ளிட்ட பல்வேறு பொருளாதார விடயங்கள் தொடர்பில் IMF குழு அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளது.

அத்துடன், இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள EFF நிதியுதவித் திட்டத்தின் ஏழாவது மீளாய்வும் இந்த விஜயத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

மேலும், 2026ஆம் ஆண்டுக்கான IMF-ன் Article IV கலந்தாலோசனைகளும் இந்தக் காலப்பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IMF குழுவின் இந்த மீளாய்வு இலங்கையின் பொருளாதார மீட்சியின் தற்போதைய நிலை, அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ள சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியுள்ள விதம் மற்றும் எதிர்கால பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பில் முக்கியமானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamiloh.com