இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு 200 மில்லியன் டொலர் கடன் வழங்கும் உலக வங்கி

இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு 200 மில்லியன் டொலர் கடன் வழங்கும் உலக வங்கி

கொழும்பு, செப்டம்பர் 1

 இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக உலக வங்கி சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகைக் கடனை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியின் ஆரம்ப கட்டமாக 77 மில்லியன் அமெரிக்க டொலர் பயன்படுத்தப்படவுள்ளது.

சுற்றுலாத்துறையின் நீண்டகால வளர்ச்சியை இலக்காகக் கொண்டு தேசிய சுற்றுலா மூலோபாயத் திட்டம், முதலீட்டு வாய்ப்புகள், சந்தைப்படுத்தல் மற்றும் துறையின் நிறுவன ரீதியான மேம்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

சுற்றுலாத்துறை இலங்கையின் பொருளாதாரத்திற்கு முக்கிய வருமான ஆதாரமாக உள்ள நிலையில், இந்த நிதியுதவி நாட்டின் சுற்றுலா வளர்ச்சிக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

tamiloh.com