இரண்டு விமான விபத்துக்கள்! ஒரே நாளில்! 25 பேர் பலி.

இரண்டு விமான விபத்துக்கள்! ஒரே நாளில்! 25 பேர் பலி.

ஜூன் 28 2026 நேற்று நடந்த இரண்டு விமான விபத்துக்களிலும் சுமார் 25 பேர் கொல்லப்பட்டனர்!

பிரான்ஸ் – ஸ்கைடைவிங் விமான விபத்து 

வடகிழக்கு பிரான்சின் நான்சி அருகே புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஒரு சிறிய ஸ்கைடைவிங் விமானம் விபத்துக்குள்ளானது.

விமானத்தில் இருந்த 11 பேரும் உயிரிழந்தனர். இதில் விமானி, பயிற்றுநர்கள் மற்றும் முதல் முறையாக குதிக்க வந்த பயணிகளும் அடங்குவர்.

தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்; விசாரணை நடைபெற்று வருகிறது. அதே சமயம் 

சவுதி அரேபியாவிலும் கடுமையான வானூர்தி விபத்து நடந்துள்ளது.

2026 ஜூன் 28 அன்று, சவுதி அரேபியாவின் ராஸ் தனூரா (Ras Tanura) பகுதியில், Saudi Aramco நிறுவனத்துக்குச் சொந்தமான ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

அதில் பயணித்த 14 பேரும் உயிரிழந்தனர். அனைவரும் சவுதி நாட்டினரே என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் இன்னும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை. அதிகாரப்பூர்வ விசாரணை நடைபெற்று வருகிறது.  

இது பயணிகள் வணிக விமான விபத்து அல்ல; எண்ணெய் நிறுவனத்தின் பணிக்காக பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் விபத்து என்பதும் குறிப்பிடத்தக்கது.