ஈரான் + அமேரிக்கா தற்போதைய நிலை!
ஏப்ரல் 20, 2026
ஈரான் + அமெரிக்கா இடையிலான நிலைமை மிகவும் பதட்டமானது. இரண்டு வாரப் போர் நிறுத்தம் முடிவடைய இருப்பதாலும், புதிய மோதல்கள் வெடித்ததாலும், ஓரிரு நாட்களில் போர் மீண்டும் ஆரம்பமாகலாம்.
இருதரப்பு நிலைப்பாடு: ஒரு புறம். டிரம்ப் புதிய பேச்சுவார்த்தை முயற்சியில் இறங்கினாலும், வரும் 22-ம் தேதி இரவுக்குள் ஒப்பந்தம் ஆகாவிட்டால், அதை மேலும் நீட்டிப்பது மிகவும் சாத்தியமில்லை எனக் கூறி, பதற்றத்தை அதிகரித்துள்ளார். இதற்கு மாறாக, ஈரான், அமெரிக்கக் கடற்படை முற்றுகையை மீறலாகக் குறிப்பிட்டு, தற்போதைக்கு அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளது.
ஈரானிய போக்குவரத்துக் கப்பலை (TOUSKA) அமெரிக்கப் படைகள்! துப்பாக்கியால் சுட்டுப் பறித்ததும், அதற்குப் பதிலடியாக ஈரான், அமெரிக்கப் போர்க் கப்பல்களை இலக்காகக் கொண்டு ட்ரோன் தாக்குதல் நடத்தியதும் மோதலை மேலும் தூண்டியுள்ளன. மறுபுறம், ஒப்பந்தம் கையெழுத்தாகாவிட்டால் ஈரானின் ஒவ்வொரு பாலமும் மின் நிலையமும் அழிக்கப்படும் என்று டிரம்ப் அச்சுறுத்துகையில், இது ஒரு உளவியல் போரை ஒத்துள்ளது.
உலகப் பொருளாதாரத்தில் தாக்கம்: உலகின் நான்கில் ஒரு பங்கு எண்ணெய் வணிகம் நடக்கும் ஹோர்முஸ் நீரிணை, மீண்டும் மூடப்பட்டு இருக்கிறது. இதனால் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து, உலகப் பொருளாதாரத்திற்கு கடுமையான அதிர்ச்சி ஏற்படும் அபாயம் உள்ளது.
ஈரான் 60% செறிவூட்டலில் 440 கிலோ யுரேனியத்தை வைத்துள்ளது, இது அணுக் குண்டு தயாரிக்கப் போதுமானது. அமெரிக்கா 20 ஆண்டுகள் நிறுத்தம் கோர, ஈரான் 5 ஆண்டுகள் மட்டுமே இடைநிறுத்தம் செய்ய முன்வந்தது.
உலகின் மொத்த எண்ணெயில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் இந்த முக்கியப் பாதை யாரிடம் கட்டுப்பாட்டில் இருக்கும் என்ற கேள்வி, முக்கியத் தடையாக இருக்கிறது.
ஏவுகணைத் திட்டம் இது ஈரானின் பாதுகாப்பு விஷயம் என்று பேச்சுக்கு அமையாது என்று ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க மறுப்பதால், இந்த முட்டுக்கட்டை நீடிக்கும் பட்சத்தில், ஏப்ரல் 22-ம் தேதி அதிகாலையில் போர் நிறுத்தம் கலைக்கப்பட்டு, புதிய ராணுவ மோதல் ஆரம்பமாக வாய்ப்பு இருக்கிறது.


