அமேரிக்கா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பெரும் வெடிப்பு!

அமேரிக்கா எண்ணெய் சுத்திகரிப்பு  நிலையத்தில்  பெரும் வெடிப்பு!

 மார்ச் 23, 2026 

🟩 டெக்சாஸ் மாநிலம், போர்ட் ஆர்தர்

🟩அமேரிக்கா  வலேரோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்  Valero Port Arthur Refinery  இது அமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றாகும், இது தினசரி 435,000 பீப்பாய்கள் வரை எண்ணெயை சுத்திகரிக்கும் திறன் கொண்டது .
🟪 மார்ச் 23, 2026 அன்று மாலை, உள்ளூர் நேரப்படி சுமார் 7:22 மணியளவில் இந்த வெடிப்பு ஏற்பட்டது .

🟫 ஆரம்ப கட்ட விசாரணைகளின்படி, ஒரு தொழில்துறை வெப்பமூட்டும் கருவியில்  heater unit  ஏற்பட்ட கோளாறே இந்த வெடிப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது . சரியான காரணம் இன்னும் முழுமையாக தீர்மானிக்கப்படவில்லை.
🟥இந்த வெடிப்பில் இதுவரை உயிர்ச்சேதம் அல்லது காயம்பட்டதாக எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை . வெடிப்பை அடுத்து பெரும் தீப்பிடிப்பு ஏற்பட்டது, ஆனால் தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
🟧 வெடிப்பு மற்றும் புகையின் தாக்கத்தால், அப்பகுதி மக்கள் உடனடியாகக் கட்டிடங்களுக்குள் தங்குமாறு shelter-in-place உத்தரவிடப்பட்டது. மேலும், SH 87 மற்றும் SH 82 ஆகிய சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது .
🟨 சமூக ஊடகங்களில் வெளியாகும் வீடியோக்களில், பெரும் தீப்பிழம்புகளும், கரும்புகை காற்றில் படர்வதையும் காண முடிகிறது. அப்பகுதி மக்கள் தாங்கள் கேட்ட பயங்கரமான வெடிப்புச் சத்தம் மற்றும் அழுகிய முட்டையின் வாடை காற்றில் வீசியதாகத் தெரிவித்துள்ளனர் .

⬛️இந்த விபத்து காரணமாக அமெரிக்காவின் எரிசக்தி சந்தையில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் பொருளாதார நிபுணர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர் .