கனடாவில் மார்ச் 19 ,20 களில் நோன்பு பெருநாள்!
கனடாவின் பெரும்பாலான பகுதிகளில் இன்று, மார்ச் 20, வெள்ளிக்கிழமை ஈத் அல்-பித்ர் கொண்டாடப்படுகிறது.
கனடிய முஸ்லிம் சங்கம் (MAC) மற்றும் டொராண்டோ ஹிலால் கமிட்டி போன்றவை, வியாழக்கிழமை மாலை பிறை தென்பட்டதை உறுதி செய்ததையடுத்து, இன்று (மார்ச் 20) பெருநாள் என்று அறிவித்துள்ளன.
சில மாற்றங்கள்: பிரிட்டிஷ் கொலம்பியா இஸ்லாமிய சங்கம் (ISBC) போன்ற சில அமைப்புகள் நேற்று (மார்ச் 19, வியாழக்கிழமை) பெருநாளைக் கொண்டாடின. எனினும், கனடாவின் பெரும்பான்மையான மசூதிகள் மற்றும் இஸ்லாமிய மையங்களில் இன்றுதான் சிறப்புத் தொழுகைகளும் கொண்டாட்டங்களும் நடைபெறுகின்றன.
பிரிடிஷ் கொலம்பியா ரிச்மன்ட் ஜாமியா பள்ளிவாசலில் 19ம்திகதி நடந்த ஈத் தொழுகையின் போது எடுக்கப்பட்ட படம்
கனடிய பிரதமர் மற்றும் பிற அமைச்சர்கள் நேற்று மாலை முதல் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தங்கள் ஈத் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


