ரஸ்யாவின் ஆயுத தொழிற்சாலைகளை தாக்கி அழித்த உக்ரைன்!

ரஸ்யாவின் ஆயுத தொழிற்சாலைகளை தாக்கி அழித்த உக்ரைன்!

24 ஜூன் 2026

ஓரன்பர்க் Orenburg சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்

உக்ரைன் எல்லைப் பகுதியிலிருந்து சுமார் 1,200 கிலோமீட்டர் {746 மைல்கள்}தொலைவில், ரஷ்யா-கஜகஸ்தான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ஓரன்பர்க் பிராந்தியத்தின் மீது உக்ரைனியப் படைகள் ட்ரோன் மூலம் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளன.

ரஷ்யாவின் மிகப்பெரிய எரிவாயு வேதிப்பொருள் வளாகங்களில் ஒன்றான ஓரன்பர்க் எரிவாயு சுத்திகரிப்பு நிலையம் Orenburg Gas Processing Plant மற்றும் ரஷ்யாவின் ஒரே ஒரு ஹீலியம் சுத்திகரிப்பு நிலையம் Orenburg Helium Plant ஆகியவற்றை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

உக்ரைனின் பாதுகாப்புப் படை மற்றும் சிறப்புப் பிரிவுகள் இணைந்து நடத்திய இந்த நடவடிக்கையால், இந்த இரு முக்கிய தொழிற்சாலைகளிலும் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உக்ரைன் இராணுவத்தின் இந்த ஆழமான தாக்குதல் ரஷ்யாவின் இராணுவ உற்பத்திக்குத் தேவையான எரிசக்தி மற்றும் விநியோகச் சங்கிலியைப் பாதிக்கும் நோக்கில் செய்யப்பட்டுள்ளது.

பால்டிக் கடற்படை ஆயுதக் கிடங்கு அழிப்பு முக்கிய திருத்தம்

செய்திகளில் வெளியான அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, உக்ரைன் அதிபர் வொலோடிமிர் செலன்ஸ்கி அழித்ததாகக் குறிப்பிட்ட வெடிபொருட்களின் அளவு 6,000 டன் அல்ல; மாறாக, அது 60,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகம் More than 60,000 metric tons ஆகும்.

 செயின்ட் பீட்டர்ஸ்பர்க் St. Petersburg அருகே உள்ள ரஷ்யாவின் பால்டிக் கடற்படைக்குச் சொந்தமான பிரம்மாண்ட ஆயுதக் கிடங்கை Baltic Fleet arsenal உக்ரைனியப் படைகள் வெற்றிகரமாகத் தாக்கி அழித்துள்ளன.

இதில் 60,000 டன்னுக்கும் அதிகமான வெடிபொருட்கள் மற்றும் ஏவுகணைகள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக அதிபர் செலன்ஸ்கி தனது டெலிகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், ரஷ்ய இராணுவத்திற்குத் தேவையான ரேடியோ-எலக்ட்ரானிக்ஸ் மற்றும் முக்கிய உதிரிபாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளையும் தங்களது படைகள் துல்லியமாகத் தாக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, மாஸ்கோ மற்றும் கெர்ச் பாலம் (Kerch Bridge) போன்ற முக்கியப் பகுதிகளைப் பாதுகாக்க ரஷ்யா தனது வான் பாதுகாப்பு அமைப்புகளை வேறு இடங்களிலிருந்து மாற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யாவின் 101 ட்ரோன் தாக்குதல்

மறுபுறம், ரஷ்யா உக்ரைனின் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து ஒரே இரவில் 101 வான்வழி ட்ரோன்களை (Drones)ஏவி பாரிய தாக்குதலை நடத்தியுள்ளது.

வான் பாதுகாப்பு: ரஷ்யா ஏவிய 101 ட்ரோன்களில், 95 ட்ரோன்களை உக்ரைனின் வான் பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதில் ஷாஹெட் Shahed ஜெர்பெரா Gerbera  இடால்மாஸ் Italmas போன்ற பல்வேறு வகையான ட்ரோன்கள் மற்றும் உக்ரைனின் வான் பாதுகாப்பை திசைதிருப்புவதற்காக அனுப்பப்பட்ட போலி ட்ரோன்களும் அடங்கும்.

எஞ்சிய சில ட்ரோன்கள் உக்ரைனின் 5 இடங்களில் தாக்கின. இந்தத் தாக்குதலில் கார்கிவ் Kharkiv பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகள் சேதமடைந்ததில் 56 வயது பெண்மணி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் Dnipropetrovsk, பொல்டாவா Poltava மற்றும் ஜாபோரிஜியா Zaporizhzhia ஆகிய பகுதிகளில் உள்ள எரிவாயு நிலையங்கள், தொழிற்சாலைகள் மற்றும் ரொட்டி உற்பத்தி ஆலைகள் போன்ற உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன.

இரு நாடுகளும் தற்போது எல்லையைத் தாண்டி, பொருளாதார மற்றும் இராணுவ ரீதியான முக்கிய உள்கட்டமைப்புகளை நேரடியாகத் தாக்கும் உத்திகளை தீவிரப்படுத்தியுள்ளதை இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.