40 ரஷ்ய போர் விமானங்களை அழித்த உக்ரைன்

40 ரஷ்ய போர் விமானங்களை அழித்த உக்ரைன்

ரஷ்யாவின் 40 போர் விமானங்களை தகர்த்த உக்ரைன்!

ரஷ்யாவின் 5 விமானப்படை தளங்கள் மீது உக்ரைன் ராணுவம் ட்ரோன்கள் மூலம் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட ரஷ்யப் போர் விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்யாவிற்கு சுமார் ரூ.60,000 கோடி மதிப்பிலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கை குறித்து உக்ரைன் பாதுகாப்பு சேவையின் தலைவருடன் பேசிய அந்நாட்டின் அதிபர் ஸெலன்ஸ்கி, ”இந்த தாக்குதல் அற்புதமான பலனைத் தந்துள்ளது” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.