இஸ்ரேலில் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவேன்! ட்ரம்ப்
எனது பதவிக்காலம் முடிந்ததும் இஸ்ரேலின் பிரதமர் பதவிக்காக போட்டியிடுவேன்! என ட்ரம்ப் தெரிவித்தார்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், செய்தியாளர்களிடம் பேசும்போது இந்த சுவாரசியமான கருத்தை நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னணி இதோ 99% ஆதரவு: இஸ்ரேல் நாட்டில் தனக்கு 99% மக்கள் ஆதரவு இருப்பதாக ஒரு கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டார்.
அடுத்த இலக்கு இஸ்ரேல் பிரதமர்?
இஸ்ரேலில் எனக்கு 99% ஆதரவு உள்ளது. நான் நினைத்தால் அங்கு பிரதமராகவே போட்டியிடலாம். எனவே, என்னுடைய தற்போதைய அமெரிக்க அதிபர் பதவி முடிந்ததும், நான் இஸ்ரேலுக்குச் சென்று பிரதமர் பதவிக்கு போட்டியிடுவேன்" என்று செய்தியாளர்களிடம் விளையாட்டாகக் கூறியுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் பதற்றமான சூழல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான தனது நெருக்கத்தை வெளிப்படுத்தவும், இஸ்ரேல் மக்கள் மத்தியில் தனக்கிருக்கும் செல்வாக்கைக் காட்டவும் ட்ரம்ப் இந்த பாணியில் பதில் அளித்துள்ளார்.
நெதன்யாகுவைப் பற்றி பேசும்போது, அவர் ஒரு நல்ல மனிதர், நான் என்ன சொல்கிறேனோ அதை அவர் செய்வார். என்றும் ட்ரம்ப் அதே பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.


